6/13, 08:49] K. Chandru Former Judge Of Highcourt: 2006 ஆம் ஆண்டில் இருந்த நிலைமைக்கு மாறாக , மகளிரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு இப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று நமக்குத் துணையாகக் கிடைத்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி கே.சந்துரு வழங்கிய தீர்ப்பே அது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில்

[6/13, 08:49] K. Chandru Former Judge Of Highcourt: 2006 ஆம் ஆண்டில் இருந்த நிலைமைக்கு மாறாக , மகளிரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு இப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று நமக்குத் துணையாகக் கிடைத்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி கே.சந்துரு வழங்கிய தீர்ப்பே அது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே
மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு , ” அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது ” என்று குறிப்பிட்டு, பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாகப் பணி புரியலாம் எனத் தீர்ப்பளித்தார்.

ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில்தான் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கமுடியாது. இந்து அறநிலயத் துறையைச் சேர்ந்த பிற கோயில்களில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்பதையும் நீதிபதி கே.சந்துரு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’

என்று அவர் தெளிவாக அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் விதத்திலும் பின்வரும் கோரிக்கைகளைத் தங்கள் மேலான பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்:

1. 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை உடனடியாக நியமிக்கவேண்டும்.

2. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தமிழ்நாடு அரசு துவக்கவேண்டும். அதில் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

3. 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் மூலமாகத் திருக்கோயில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் பெண் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என ஆக்கப்பட்டது. அதே சமத்துவ உணர்வின் அடிப்படையில் மாநில , மாவட்ட ஆலோசனைக் குழுக்களில் பெண் ஒருவரை நியமிக்க ஏதுவாக ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.

4. ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 49 கோயில் அறங்காவலர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்கவேண்டும் எனக் கூறுகிறது. அதே சமத்துவ உணர்வின் அடிப்படையில் அவர்களை மாநில அளவிலான ஆலோசனைக் குழுவிலும், மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினர்களாக நியமிக்க ஏதுவாக ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவுகள் 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.

5. கோயில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும் ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் ஆண் / பெண் என்ற பாலின பாகுபாடு ஏதுமில்லை. எனவே பெண் ஒருவரை அர்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை. எனினும் பணியாளர் என்பதற்கு அந்தப் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் The expression “office-holders or servants” shall include archakas and pujaries of all gender என்று திருத்தம் செய்து மகளிர் மட்டுமின்றி திருநங்கையரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழிசெய்ய வேண்டும்

இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கோயில்களில் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டும் என்ற’ சமத்துவப் பெரியார்; கலைஞர் அவர்களின் கனவை நனவாக்கி அவரது ‘நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

என அக்கடிதத்தில் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[6/13, 08:50] Sekarreporter1: Who is ravikumar
[6/13, 08:51] K. Chandru Former Judge Of Highcourt: Member of Parliament &an advocate in our bar!

You may also like...