[5/18, 16:25] Kumara Devan: தர்மசங்கடம் என்பதற்கும் தரும சங்கடம் என்பதற்கும் நிரம்பவேறுபாடுகள் உண்டு. நாம் கடைபிடிப்பது தர்மம். மகாபாரத தருமனுக்கு ஏற்பட்ட சங்கடம் தரும சங்கடம். சனாதன தருமம் என்று அழைக்காமல் சனாதன தர்மம் என்றே அழைப்பார்கள். நீதிபதி NAVJஇறுதிப் பகுதியில் சொன்னவை சரி என்றாலும் அவர் காட்டிய இலக்கிய உவமானங்கள் சற்று நெருடலாக எனக்கு இருக்கிறது. கும்பகர்ணன், வீடணன், கர்ணன் போன்ற இதிகாசப்பாத்திரங்கள் வழியாகக் காட்டும் அறச் செயல்கள் விவாதத்திற்குரியவை. இன்றும் மேடைதோறும் விவாதிக்கப்படுபவை. ஆனால் அவைகள் சுட்டுவது பற்றி நீதிபதி அவர்கள் எடுத்தாண்டு அவர் கூறிய கருத்துக்கு வலு சேர்ப்பது அழகாக உள்ளது. உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெறும் முன் தொண்டர்களுக்கு ஓரு காங்கிரஸ் அன்பர் உணவளித்தாராம். ராஜாஜியும் கலந்து கொண்டார். அப்போது ஒரு தொண்டர் இன்னும் கொஞ்சம் பாயசம் கொடுங்கள் என்று கேட்க, அவரைப் பார்த்து ராஜாஜி நீங்கள் நாக்கைக் கட்டுப்படுத்தாதவர்., உங்களால் சிறைக்கு வந்து துன்பம் அனுபவிக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டாராம். அதுபோல் பெரியார் எதிர் வழக்காடாமல் தன் கருத்தை வலியுறுத்தி வாக்குமூலம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.திருச்சி கலெக்டர் மலையப்பன் வழக்கிலும் பெரியார் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட போதும் அதே நிலையைக் கடைப்பிடித்தார். ஒவ்வொருவர் பார்வையிலும் “நடுவு நிலைமை” மாறும். அது நீதிபதிகள் பார்வையிலும் மாறும். நீதிபதி NAVJ பார்வை என்றும் நடுநிலை மாறாதது என்பதில் எனக்கு அய்யம் எப்போதும் இருந்ததில்லை. [5/18, 16:42] Sekarreporter 1: