வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, சதீஷ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

பில்லி சூனியம் வைத்ததாக கூறி பெரியம்மாவை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர், தங்கள் ஆண்வாரிசு இருக்க கூடாது என்பதற்காக பில்லி சூனியம் வைத்ததாக கூறி, தனது பெரியம்மாவை கடந்த 2009ம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், சதீஷ்க்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, சதீஷ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

You may also like...

CALL ME
Exit mobile version