மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை பெற, 99 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், எத்தனை பேருக்கு, அந்தஸ்து கிடைக்கும் என்பது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழுவின் பரிசீலனைக்கு பின், தெரிய வரும்.dinamalar news

[11/2, 10:19] Sekarreporter 1: https://m.dinamalar.com/detail.php?id=2644669
[11/2, 10:22] Sekarreporter 1: logo
Welcome M T Sekar Logout

dinamalar telegram
Advertisement
Home

பொது
PrevNext
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து யாருக்கு? ௯௯ பேர் பட்டியல் வெளியீடு!
பதிவு செய்த நாள்: நவ 02,2020 02:06
Home
Share
சென்னை: மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை பெற, 99 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், எத்தனை பேருக்கு, அந்தஸ்து கிடைக்கும் என்பது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழுவின் பரிசீலனைக்கு பின், தெரிய வரும்.

தமிழ்நாடு பார் கவுன்சில் வெளியிட்டுள்ள, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து பெற்றவர்களின் பட்டியலில், 237 பேர் உள்ளனர். மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து பெறுவதற்கான புதிய விதிமுறைகளை, ஜூலையில், உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, செப்டம்பரில் விண்ணப்பங்களை வரவேற்று, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பவர்கள், 45 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்; நீதிமன்றங்களில் குறைந்தது, 10 ஆண்டுகள் பிராக்டீஸ் செய்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் தொடர்ந்து, வருமான வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்.குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலோ, ஒழுக்க முறைகேடுக்காக, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ, தொழில் ஒழுங்கீனத்துக்கான விசாரணை, பார் கவுன்சிலில் நிலுவையில் இருந்தாலோ, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இருந்தாலோ, விண்ணப்பிக்க முடியாது.தற்போது, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களில், 99 பேர் அடங்கிய பட்டியலை, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

இவர்களைப் பற்றிய கருத்துக்களை, 30 நாட்களுக்குள், பெயர், முகவரியுடன், பதிவாளர் வாயிலாக தெரிவிக்கலாம். ஆனால், அனாமதேய கடிதங்கள், போலியான கடிதங்களாக இருக்கக் கூடாது.யார், யார்?கடந்த, 1966ல், பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் என்.சந்திரசேகரன், ௧௯68ல் பதிவு செய்த, ஏ.வி.சோமசுந்தரம், ௧௯71ல் பதிவு செய்த, ஆர்.பொன்னுசாமி, ௧௯73ல் பதிவு செய்த என்.ஜோதி ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பதவி வகிக்கும், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத், வழக்கறிஞர்கள் கே.ஆர்.தமிழ்மணி, வி.ராகவாச்சாரி, பழனி செல்வராஜ், கே.சக்திவேல், பி.குமரேசன், ஏ.எல்.காந்திமதி, வி.ஆர்.கமலநாதன். அப்துல் சலீம், ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், கார்த்திக் சேஷாத்திரி, கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன், பி.சரவணன், ஆர்.கார்த்திக் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மதிப்பெண் கணக்கீடு வழக்கறிஞராக, 10 முதல், 20 ஆண்டுகள் வரை பிராக்டீஸ் இருந்தால், 10 புள்ளி; 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், 20 புள்ளி.தீர்ப்புகள் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளில் பெற்ற நிபுணத்துவம் அடிப்படையில், 40 புள்ளி; சட்டப் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், 15 புள்ளி; நேர்முகத் தேர்வுக்கு, 25 புள்ளி என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.தலைமை நீதிபதி தலைமையிலான நிரந்தர குழுவானது, மூத்த வழக்கறிஞர்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரின் ஒப்புதலுக்கு வைக்கும். பெரும்பான்மை அடிப்படையில், முடிவெடுக்கப்படும்.
Share

You may also like...