மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூஷன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூஷன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த டியூஷன் மாஸ்டர் லோகநாதன் என்பவரிடம், 15 வயது மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார்.

கடந்த 2018ல், லோகநாதன், அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மாணவனின் தந்தை, செம்பியம் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, லோகநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com