மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் 18.3.2021 அன்று ஆற்றிய உரை: மாண்புமிகு மாநிலங்களைத் தலைவர் அவர்களுக்கு நன்றி

மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் 18.3.2021 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு மாநிலங்களைத் தலைவர் அவர்களுக்கு நன்றி

இடஒதுக்கீடு அளிப்பதற்கான மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு ஊடுருவி வருவதாகவும், இதனால் மாநில சட்டமன்றத்தின் களத்தைத் தாண்டி வருவதாகவும் மாநிலங்களவையின் கவனத்திற்கு கொண்டு வர நான் விழைகிறேன். அத்தகைய முயற்சி அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.

தமிழ்நாட்டில், 1993 ஆம் ஆண்டின் மாநிலச் சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களில் 69% இடஒதுக்கீடு உள்ளது, இது ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாக்கப்படுகிறது. மாநில பல்கலைக்கழகமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் மாநில இட ஒதுக்கீட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் மண்ணிலும், பேரறிஞர் அண்ணாவின் கோட்டையிலும் ஒரு சமூக அநீதி இப்போது மத்திய அரசால் நமது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு முதல் எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பை வழங்குகிறது, மேலும் இந்த பாடத்திட்டத்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை முழு நிதியுதவி செய்கிறது. இந்த பாடநெறிக்கான சேர்க்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் 69 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது. திடீரென்று, 2020 ஆம் கல்வியாண்டு  முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பாடநெறியில் 27% இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசு,வலியுறுத்துகிறது.

மத்திய இடஒதுக்கீடு சட்டம் 2006 மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது.

அய்யா, மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் மாநிலங்கள் அளித்த இடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தாது குறித்து திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த ஆணைகளை மத்திய அரசு செயல்படுத்தப்படவில்லை.

சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக விளங்கிய இடஒதுக்கீடு குறித்த முப்பதாண்டு கால சட்டத்தை உடைத்தெறிய இப்போது முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு குறித்து தீர்வு காணப்பட்ட சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சினைகள், தற்போது சட்டமியற்றுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற ஏற்றுக்கொள்ள முடியாத முன்மாதிரியின் கீழ் 102 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்து மத்திய அரசு முயற்சிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மத்திய அரசு என்ன செய்தியை 
மாநிலங்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறது? அவர்களுக்கு இனி சட்டமன்றத் திறன் இல்லை என்று சொல்கிறதா? இந்தியா இப்போது ஒரு ஒற்றையாட்சி நாடா? கூட்டாட்சி அமைப்பு இனி அரசியலமைப்பின் அடிப்படை அம்சமம் இல்லையா? பிரிவு 102 இன் தவறான விளக்கத்தின் மூலம் அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள மாநிலத்தின் சட்டமன்ற அதிகாரங்களை மத்திய அரசு எவ்வாறு மறுக்க முடியும்?

இப்போது இந்தியாவில் பெரும்பான்மை மக்களைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒரே தளத்தின் கீழ் ஒன்றுபட வேண்டிய இடம் வந்துவிட்டது.

 இந்திய அரசியலமைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை அழிப்பது குறித்து வேதனை அடைகிறேன்.

மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் உள்ள அரசியலமைப்பு பாதுகாப்பை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.

நமது அரசியலமைப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த நாட்டில் இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டம் மிகப் பெரிய மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்த இடஒதுக்கீடுகளைப் பெற பலர் தங்கள் உயிரையும், வியர்வையையும், இரத்தத்தையும் கொடுத்தார்கள், அது மத்திய அரசால் பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது.  

இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் மாண்புமிகு சட்ட அமைச்சர் மற்றும் சமூக நீதி அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன், இடஒதுக்கீடு வழங்குவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தை எந்தவொரு நிறுவனத்தின் மூலமும் தடுத்திட வேண்டாம், அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்தால் நுட்பமாக உருவாக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகளை  கடுமையாக பாதிக்கும்

You may also like...