பெரி கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், அனுமதி, கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய முடியாது என SRM பல்கலைகழகம் தாக்கல் செய்த ரிட் மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.* *மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, முன்வைத்த வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு; SARFAESI தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் DRT-யிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவு.*

*பெரி கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், அனுமதி, கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய முடியாது என SRM பல்கலைகழகம் தாக்கல் செய்த ரிட் மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

*மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, முன்வைத்த வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு; SARFAESI தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் DRT-யிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவு.*

வழக்கின் பின்னணி
, PERI கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், அனுமதி, கவுன்சிலிங்கில் பங்கேற்பு மற்றும் மாணவர் சேர்க்கையை இடைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ரிட் மனுத் தாக்கல் செய்தது.

*உயர்நீதிமன்றத்தில் விசாரணை*
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது SRM பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர், SARFAESI ஏலத்தில் வெற்றிகரமான ஏலதாரராக தாங்கள் அறிவிக்கப்பட்டு, முழு ஏலத் தொகையையும் செலுத்தி விற்பனைச் சான்றிதழையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், PERI கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து அந்த வளாகத்திலேயே செயல்பட்டு வருவதால் தங்களது உரிமை பாதிக்கப்படுவதாகவும், DRT-யில் தாக்கல் செய்யப்பட்ட இம்ப்ளீட் மனு இன்னும் நிலுவையில் இருப்பதால், PERI கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், அனுமதி, கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கையை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்து, PERI கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா மற்றும் தாமோதரன் வாதிடுகையில் இந்த ரிட் மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று வாதிட்டார். SARFAESI சட்டத்தின் கீழ் சொத்தின் நேரடி உடைமையைக் (Physical Possession) கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும், ஏல விற்பனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் DRT-யில் விசாரணை நிலுவையில் இருப்பதுடன், உடைமையை கைப்பற்றும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே, பாதுகாப்பு சொத்து தொடர்பான அனைத்து உரிமை மற்றும் சட்டப்பூர்வ பிரச்சினைகளும் சிறப்பு தீர்ப்பாயமான DRT-யிலேயே முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, அவற்றின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தொடர்ச்சியான உத்தரவுகளை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

தீர்ப்பு
மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, SARFAESI சட்டத்தின் கீழ் ஏல விற்பனை மற்றும் பிரிவு 14-ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய இரண்டும் ஏற்கனவே DRT-யில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டது. எனவே, பாதுகாப்பு சொத்து தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தரப்பினர் DRT-யிலேயே முன்வைத்து தீர்வு காண வேண்டும் என்றும், SRM பல்கலைக்கழகம் விரும்பினால் DRT-யில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், இம்ப்ளீட் மனுவையும் விரைந்து விசாரிக்கக் கோரி உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, SRM பல்கலைக்கழகம் கோரிய நிவாரணத்தை வழங்காமல், ரிட் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version