பெரியாரின் கண்கள் கலங்கியதைக் கண்டு நாமகிரி அழுதார். வழக்கறிஞர் எஸ். துரைசாமி. ………….

[9/14, 11:20] Mhc Advt Elango: பெரியாரின் கண்கள் கலங்கியதைக் கண்டு நாமகிரி அழுதார். வழக்கறிஞர் எஸ். துரைசாமி.
………….…………………………

மூதறிஞர் ராஜாஜி சென்னை பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ஏறத்தாழ சுயநினைவு இழந்துவிட்டார் என்றே சொல்லலாம். அவரை காண 23.12.1972 அன்று தந்தை பெரியார் செல்கிறார். கூட என்னையும் அழைத்துச் செல்கிறார். அங்கே மருத்துவமனையில் ராஜாஜியை கவனித்து வந்த அவரது மகள் நாமகிரி பெரியாரிடம் நீங்க வருவீங்கன்னு தெரியும் உங்களுக்காகத்தான் அவர் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னதும் பெரியாரின் கண்கள் கலங்கியது. அதைப்பார்த்து நாமகிரி அழுதார். நாமகிரிக்கு ஆறுதல் கூறும் விதமாக தனக்கும் ராஜாஜிக்கும் இடையிலான பல சம்பவங்களை பெரியார் நினைவு கூர்ந்தார். பெரியார் அங்கு வந்ததை கேள்விப்பட்ட ஓய்வறையிலிருந்த முதல்வர் கலைஞர் பெரியாரைப் பார்க்க வந்துவிட்டார். கூடவே என்.வி.நடராசனும். இருவரும் பெரியாரை வழியனுப்பிய போது எடுத்த புகைப்படம். அய்யாவை வீல் சேரில் அழைத்துக்கொண்டு யூரின் பேக்கை பிடித்துக் கொண்டு வருவது நான் தான்.
வழக்கறிஞர் எஸ்.துரைசாமி
[9/14, 11:22] Sekarreporter 1: 🌹
[9/15, 23:37] Mhc Advt Elango: அவர் ஒருவர்தான் பெரியார்

ஒருவரை மாணவரணி செயலாளராக தந்தை பெரியார் அவர்கள் எப்படி நியமிக்கிறார் பாருங்கள்:
S.துரைசாமி M.A.B.L அவர்களை மாணவரணி செயலாளராக நியமிக்க அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ள அவரும் ஒத்துக்கொண்டார். எனவே அவர் மாணவரணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதுதான் தந்தை பெரியாரின் பண்பாடு. இவ்வாறாகத்தான் ஜூன் 1973 இல் நான் தி.க. மாணவரணி செயலாளரானேன். நான் உட்பட மாணவரணியினர் அய்யாவுடன் பயிற்சி முகாமின் போது புகைப்படம் எடுத்துக் கொண்டோம். படத்தில் உள்ளவர்கள் யார் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். வழக்கறிஞர் எஸ் துரைசாமி
[9/16, 05:55] Sekarreporter 1: 🌹🌹

You may also like...