புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதி தேர்தல் வழக்கில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதி தேர்தல் வழக்கில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள உருளையான்பேட்டை தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.. ஜி.நேருவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜி.கோபால் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு தனக்கு எதிராக வெளியான அவதூறு செய்தியை, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அடித்து பிரச்சாரம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரசாரத்தின் மூலம் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோபால் வழக்கு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 6 தள்ளிவைத்துள்ளார்.

You may also like...