பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்
ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதப்பட்டி ரங்கராஜின் 2 வது மனைவியான பிரபல ஆடை வடிவமைப்பாளர்
ஜாய் கிரிசில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரபல உணவு தயாரிப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு வழங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் தன்னையும் தன் குழந்தையும் நீதிமன்றம் வரவழைத்து விட்டதாகவும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம் என்றும் அதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு திசை திருப்பி விட்டு தன்னை அழைக்கழிக்க வைப்பதாகவும் கூறிய அவர் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தன் குழந்தைக்கு தந்தை என பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்
((ஜாய் கிரிசில்டா
பாதிக்கபட்ட பெண்
ஆடை வடிவமைப்பாளர்))