பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பக்கெடுக்கள் பயன்படுத்தப்படுகிறது, பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பக்கெடுக்கள் பயன்படுத்தப்படுகிறது, பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளாட்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உறுபதியாளர்கள்ள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது,

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, உணவு பொருட்கள், தின்பண்டங்கள், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுகின்றன. மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும் 15 பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது என்று நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் விஞ்ஞானி டாக்டர் சரண்யா சார்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த பிப்ரவரி 24ல் நடைபெற்றது. அதில் இந்த பிளாக்டிக்கை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல், விற்பனை செய்தலை தடுக்க விதிகளில் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய சிறப்பு குழுவை அமைக்க தலைமை செயலாளர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் வருவதை தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக கூறி சில்லரை வியாபார கடைகளை மூடும் நிலையில் அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா? ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை. அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும்.
அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது. பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெடுக்கள் பயன்படுத்தப்படுகிறது என்று கருத்து தெரிவித்து விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...