பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர்,  உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்ணன் விடியோக்கள் வெளியிட்டு வருவதாக

நீதிபதி சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வு முன்பு பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர்,  உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்ணன் விடியோக்கள் வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.. அரசு மற்றும் காவல் துறை இந்த விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பல வழக்கறிஞர்களும் பார்த்து வருகின்றனர் இது நீதித்துறையை மிகவும் அவமதிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .இதையடுத்து  வருகிற திங்கட்கிழமை இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்

You may also like...

CALL ME
Exit mobile version