பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பாஜகவின் மாநில வழக்கறிஞர் அணி தலைவராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ குமரகுரு கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.

இதனைடுத்து இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவரும் ஆர் சி பால்கனகராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது .

இதில் உயர் நீதிமன்ற பாஜக வழக்கறிஞர்கள் ஏற்காடு ஏ. மோகன் தாஸ், மயிலாடுதுறை ராஜேந்திரன்,
ரபு மனோகர் ,எஸ்.திவாகர், பாஸ்கரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்தனர்

பின்னர், ஆவின் கேட் வெளியே பாஜக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் வரவேற்பு கொடுத்தனர்

இந் நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்

இதில் புதிய தலைவர் நியமனத்தை வரவேற்று பேசிய மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் பேசுகையில், இனிமேல் தமிழக பாஜக வழக்கறிஞர் அணி புத்துணர்ச்சியோடும் எழுச்சியோடும் செயல்படும் என்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரகுரு அனுபவம் வாய்ந்தவர் என்றும் அவருக்கு வழக்கறிஞர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com