பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் குறித்த விசாரணைக்காக அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை ஆஜர்படுத்தியுள்ளனர்.

பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் குறித்த விசாரணைக்காக அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை ஆஜர்படுத்தியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது யூடியூப் சேனலில் அவற்றை பதிவேற்றி ஆபாசமாக பெண்களை இழிவுபடுத்தி பேசியதால் யூடியூபர் மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். கிருத்திகா கை குழந்தையுடன் சிறையில் இருந்ததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. பப்ஜி மதன் மீது குண்டாஸ் பாய்ந்தது. இந்த நிலையில் மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான விசாரணை அறிவுரைக் கழகத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பப்ஜி மதனை புழல் சிறையில் இருந்து கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். அப்போது மதனின் மனைவி கிருத்திகா கை குழந்தையுடன் வந்திருந்தார். அவரது பெற்றோரும் உடன் வந்திருந்தனர். ஆனால் சிறைத்துறை போலீசார் அருகில் சென்ற பேச அனுமதிக்கவில்லை.

குண்டாஸ் பதிவு செய்யப்பட்டால் அறிவுரை கழகத்தில் விசாரணை நடத்தி குறிப்பிட்ட வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது முறை தானா ? என்பதை விசாரிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக கொண்ட அறிவுரைக் கழகம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரமும் கொண்டது. அதனடிப்படையில் மதன் வழக்கில் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களான
ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி மற்றும் ராமன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

You may also like...