நீரை காத்த நீதியின் மனிதர்” மாண்புமிகு நீதியரசர் திரு ஆர். சுரேஷ்குமார் அவர்களுக்கு KAIFA சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் மரியாதையும்.

[28/05, 14:35] sekarreporter1: [28/05, 14:33] sekarreporter1: http://youtube.com/post/UgkxLVjRRvYxhKNxDcAoswreQMMyIMx6ZFIE?si=Pv2eMA_6RHm6Z7Av
[28/05, 14:33] sekarreporter1: “நீரை காத்த நீதியின் மனிதர்”

மாண்புமிகு நீதியரசர் திரு ஆர். சுரேஷ்குமார் அவர்களுக்கு KAIFA சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் மரியாதையும்.

புதுக்கோட்டை மண்ணின் மைந்தர், எளிமையின் அடையாளம், சமூக நீதி உணர்வின் உருவம், மாண்புமிகு நீதியரசர் திரு ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பணி ஓய்வு பெறும் இந்த தருணத்தில், KAIFA – கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், உயர்ந்த மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேராவூரணி பெரிய குளம் மறுசீரமைப்பில் தொடங்கிய எங்கள் சிறிய முயற்சியை, “100 ஏரிகள் மீட்பு” என்ற இயக்கமாக மாற்றிய தூணாக இருந்தவர் நீதியரசர் சுரேஷ்குமார் அவர்கள்.

நீதித்துறையின் பல முக்கிய ஆதரவுகளை எங்களுடன் இணைத்தவர். மாண்புமிகு நீதியரசர் திரு. பாரதிதாசன்,மாண்புமிகு நீதியரசர் திரு புகழேந்தி , மாண்புமிகு நீதியரசர் ஜெயச்சந்திரன், மாண்புமிகு நீதியரசர் செந்தில்குமார் , மாண்புமிகு நீதியரசர் திரு. ஜெகதீஷ் சந்திரா , மாண்புமிகு நீதியரசர் திரு. தண்டபாணி ,
அவர்கள் உடன் இணைந்து, “மக்கள் பங்களிப்புடன் கூடிய விவசாயிகள் ஏரி மறுசீரமைப்பு” என்ற கருத்தை கொள்கை ரீதியான செயலாக்க நிலைக்கு கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு.

எங்கள் “100 ஏரிகள் மீட்பு” முயற்சியை மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு சுந்தரேசன் அவர்களிடம் கொண்டு சென்ற அந்த தருணம், KAIFA மனதில் ஒரு விதையை விதைத்தது. அந்த விதையே இன்று “MISSION 1000 LAKES” என்ற மகத்தான இலட்சியமாக வளர்ந்து நிற்கிறது.

பதவியும் அதிகாரமும் உயர்ந்தபோதும், எளிமையையும் மனிதநேயத்தையும் விடாமல் வாழ்ந்தவர் அவர். பணி ஓய்வு நாளிலும் கூட எந்த ஆடம்பரமும் வேண்டாம் என அமைதியாக வெளியேறிய அவரது பணிவு, இந்த தலைமுறைக்கு ஒரு பெரிய பாடமாகும்.

நீதியை மட்டும் வழங்கியவர் அல்ல… நீரையும், விவசாயத்தையும், சமூக பொறுப்பையும் காக்க நம்பிக்கை கொடுத்த மனிதர் அவர்.

“ஒரு நீதியரசரின் கையொப்பம் சில தீர்ப்புகளை மாற்றும்…
ஆனால் ஒரு நல்ல மனிதரின் ஆதரவு ஒரு தலைமுறையின் பாதையை மாற்றும்.”

உங்கள் சேவைக்கும், எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும், தமிழகத்தின் நீர்நிலைகள் மீது கொண்ட அக்கறைக்கும், KAIFA என்றும் நன்றியுடன் இருக்கும்.

வாழ்க உங்கள் எளிமை! வாழ்க உங்கள் சமூக நீதி பயணம்! வாழ்க நீர்நிலைகள் காக்கும் உங்கள் சிந்தனை!

கவிநாடு கண்மாய், வல்லநாடு கண்மாய் மீட்டு எடுத்தது இவரின் பங்கு பெரியது.

— KAIFA கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் Mission 1000 Lakes 🌿
– MilkyMist

#KAIFA
#tamilnadu
#waterbody
#miyawakiforest
#pudukkottaidistrict
#pudukkottaikingdom
#MilkyMist
[28/05, 16:44] sekarreporter1: [28/05, 16:42] sekarreporter1: http://youtube.com/post/UgkxlJMreDaTrVkmOH79_cOq_IODDpvVFnyr?si=60m3a7a8tDi21Psz
[28/05, 16:43] sekarreporter1: ] Amal Raj Chairman bbar council /: Honourable
Justice R Sureshkumar
Judge high court of madras

தங்களின் நீண்டகால நீதித்துறைப் பணியில் வெளிப்படுத்திய நேர்மை, அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சட்டத்தின் மேன்மையை நிலைநாட்டிய உயரிய சேவைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் வழங்கிய தீர்ப்புகளும், நீதிக்கான தங்களின் அர்ப்பணிப்பும் சட்டத்துறையினருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கும்.

தங்களின் ஓய்வு வாழ்க்கை நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிரம்பியதாக அமைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
P. S. Amalraj
Chairman
Bar Council of Tamil Nadu and Puducherry
[28/05, 16:41] sekarreporter1: 👍👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com