நீதி கேட்டு போராடிய தமிழக வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து* ✊

*நீதி கேட்டு போராடிய தமிழக வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து* ✊✊

சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 👍

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் சமூக 19வயது மாணவி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து, கழுத்து,முதுகெலும்பு உடைப்பட்டு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாக்குமூலம் அளித்துஇறந்தார்.அவர் படுகொலை செய்யப்பட்டபோது,குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இறந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையே எரித்தனர். இந்த அராஜக போக்கை கண்டுகொள்ளாத BJP ஆளும் U.P. அரசை கண்டித்தும் ,
ஒன்றிய அரசை
கண்டித்தும்,

கடந்த 01.10.2020 அன்று பொன்னேரி டாக்டர். அம்பேத்கர் சிலை அருகில் போராடிய பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்த பொன்னேரி, சென்னை உயர்நீதிமன்ற 8 வழக்கறிஞர்கள்,
1 சட்ட கல்லூரி மாணவர் மற்றும் 1 சமூக ஆர்வலர் ஆகியோர் மீது பொன்னேரி E1 காவல்துறையால் Crime No 3060/2020 என்ற வழக்கு IPC பிரிவு 143,188,269 போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து
சென்னை உயர் நீதி மன்றதில் CRL.O.P.No.20336/2020என்ற வழக்கை தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கை ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலதலைவர் *கு.பாரதி* , *ரமேஷ் உமாபதி, விஜய், புகழ்வேந்தன், சங்கர்* ஆகியோர் வழக்கு நடத்தினர்.

பொய் வழக்கில் போடப்பட்ட FIR -ஐ மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி M.நிர்மல்குமார் அவர்கள் ரத்து செய்து ,22.12.2022 தீர்ப்பளித்து,
அதன் நகல் 25.2.2022
வழங்கப்பட்டுள்ளது.

*நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது :*

மனுதாரர்கள் முழக்கம் எழுப்பி போராடியது அரசியல் அமைப்பின் உரிமை என்றும்,

அரசுக்கு எதிராக முழக்கமிடுவது குற்றமாகாது என்றும் அரசியல் அமைப்பின் உரிமை என்றும் மாண்புமிகு நீதிபதி M.நிர்மல்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்க்கு எதிராக போடப்படும் பொய் வழக்கை கட்டணமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் எப்போதும் தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நீதிக்கான போராட்டம் தொடரும்.
செய்தி வெளியீடு:
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்DAA மாநிலமையம்.

J.மோகன்ராஜ் மாநில துணைபொதுச்செயலாளகண்ணன் மாநில செய்தி தொடர்பாளர்.

You may also like...