நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரிக்க வந்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும்

சென்னை
விருகம்பாக்கத்தில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்
வழி பாதையை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

மேலும் அனுமதியின்றி
சட்டவிரோத கட்டிடம் கட்டியது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும ஆணையர் ஆகியோர் இரண்டு வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் எம் ஜி எம் குடியிருப்பு அமைந்துள்ளது என்றும் வசிக்கும் குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிப்பாதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,

இந்த குடியிருப்பில் வசிக்கும் சென்னை மாநகராட்சி முன்னாள் நகர பொறியாளர் மனைவி அன்புச்செல்வி என்பவர் இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்

எனவே வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு சென்னை நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரிக்க வந்தது.

மனுதாரரான வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி,
கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் அன்புச்செல்வியின் கணவர் மாநகராட்சியில் பொறியாளராக பணி புரிந்ததால்

சட்ட விரோதமாக அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும்,

எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இடைக்கால தடை விதிப்பதாகவும், இரண்டு வார காலத்திற்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version