நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் சு.குமார தேவன், கவிஞர் கலி.பூங்குன்றன் சார்பில் த.வீரசேகரன், விடுதலை ராஜேந்திரன் சார்பாக வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி மனுதாரரின் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும்

*பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட பெரியார் விருதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

தமிழ்நாடு அரசால் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகள் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதல் விருது திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பின்பு திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன், தவமணிராசன், கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலை ராஜேந்திரன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. மேற்கண்ட விருது அளிக்கப்பட்டதை எதிர்த்து புது வெண்ணாம்புதூர் என்ற ஊரினை சார்ந்த டி. ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடுத்த ரிட் மனுவில் 1994 முதல் பெரியார் விருது அளிக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப்பெற்று புதிதாக தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தான் பல்வேறு சமூகப்பணிகளை செய்வதாகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், தனக்கு பெரியார் விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேற்கண்ட மனுவுக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் இதுவரை 55 புத்தகங்களை எழுதியிருப்பதாகவும், அதில் 13 புத்தகங்கள் தந்தை பெரியாரைப் பற்றி எழுதப்பட்டதாகவும் பெரியாரின் பணியை, பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காக தினமும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருவதாகவும், வாட்ஸ் அப்பில் ஒரு நிமிட செய்தி தொகுத்து வழங்கி வருவதாகவும், பல்வேறு யூடியூப் சேனல்கள் மூலம் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருவதாகவும், “கருஞ்சட்டை தமிழர்” என்கிற வார ஏட்டினை நடத்தி வருவதாகவும் அதில் தந்தை பெரியாரின் கருத்துக்களை பரப்புவதாகவும் அந்தக் காரணத்துக்காக தனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மனுதாரர் ஸ்ரீதர் கவிஞர் கலி.பூங்குன்றனுக்கு வழங்கப்பட்ட விருதுக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தற்போது தன்னை இந்த மனுவில் ஒரு எதிர் மனுதாரராக சேர்த்து புதிதாக மனு தாக்கல் செய்துள்ளதாகவும் 1994 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் விருது அளிக்கும் அரசாணையை 31 ஆண்டுகளுக்கு கழித்து அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு
நிலைக்கத்தக்கதல்ல என்று தெரிவித்தார்.

மேற்கண்ட ரிட் மனு நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் சு.குமார தேவன், கவிஞர் கலி.பூங்குன்றன் சார்பில் த.வீரசேகரன், விடுதலை ராஜேந்திரன் சார்பாக வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி மனுதாரரின் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com