நீதிபதி சௌந்தர், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் முழு பிளாட்டும் சட்டவிரோதமாக கிளினிக்காக மாற்றப்பட்டதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும், பெருநகரின் கலப்பு மண்டலத்தில் (mixed zone) உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா? அத்தகைய பயன்பாடு மற்ற குடியிருப்பாளர்களின் உரிமைகளை மீறுகிறதா? என்ற கேள்விகளுக்கு முழுமையான விசாரணை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
[01/01, 21:58] Mukesh Reporter: அடுக்குமாடி குடியிருப்பில் பல் மருத்துவமனை நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ரெட்பிரிக் லீலா அபார்ட்மெண்ட்டில் உள்ள இரு வீடுகளின் உரிமையாளர்களான பல் மருத்துவர் ரோஷன் டொமினிக் ஜூட் ரேயன் மற்றும் லூர்து ஜோவானி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்கள் வீடுகளில் பல் மருத்துவமனை நடத்தப்பட்டுவரும் நிலையில், மருத்துவமனையை நடத்த தடை விதிக்கவும், எக்ஸ்ரே உபகரணங்களை அகற்றவும், பொது பயன்பாட்டு பகுதியில் உள்ள பொருட்களை அகற்றவும், சொத்தை வணிக ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதாக கூறி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மற்ற வீடுகளின் உரிமையாளர்களான பால ராஜேஸ்வரி, அலெக்சாண்டர், வின்சென்ட் உள்ளிட்ட 5 பேர் ஆகியோர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவினை ஏற்க மறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ். சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மருத்துவர்கள் வீட்டிலிருந்தே மருத்துவமனைகளை நடத்த அனுமதிக்கப்படுவதாக முந்தைய வழக்குகளில் முடிவெடுக்கப்பட்டுள்ளதால், பிற உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டுமன கோரினார்.
பிற உரிமையாளர்கள் தரப்பில், இருவரும் அந்த வீடுகளில் வசிக்காமல், அவற்றை பல் மருத்துவமனையாக மாற்றி வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்.
பின்னர் இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி சௌந்தர், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் முழு பிளாட்டும் சட்டவிரோதமாக கிளினிக்காக மாற்றப்பட்டதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும், பெருநகரின் கலப்பு மண்டலத்தில் (mixed zone) உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா? அத்தகைய பயன்பாடு மற்ற குடியிருப்பாளர்களின் உரிமைகளை மீறுகிறதா? என்ற கேள்விகளுக்கு முழுமையான விசாரணை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் கட்டப்படும் ஒவ்வொரு கட்டடதுக்கும் கட்டுப்பாடற்ற வணிக பயன்பாட்டை அனுமதிக்கலாம் என அர்த்தமல்ல என்றும், குடியிருப்பு கட்டடமா அல்லது வணிக கட்டடமா என்று கட்டிடத்தின் தன்மையை ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெளிபவுபடுத்தியுள்ளார்.
வீட்டின் ஒரு பகுதியை கிளினிக்குக்கு பயன்படுத்துவதை மட்டும் பழைய உத்தரவு அனுமதிப்பதாகவும், ஆனால் இந்த வழக்கில் ஒட்டுமொத்த வீடும் கிளினிக்காக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, வீட்டிலிருந்து மருத்துவ பணி புரிவதற்கான உரிமை மூலம் முழுமையான வணிக ரீதியான மாற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
15 ஆண்டுகளாக மருத்துவமனையை நடத்தி வருவதாக மருத்துவர்கள் வைக்கும் வாதத்தை உரிமையியல் வழக்கு விசாரணையின் போது சாட்சியத்தின் மூலம் தான் நிரூபிக்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க கோரிய மருத்துவரின் மனுவை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்தது சரியானது என நீதிபதி எஸ். சௌந்தர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பல் மருத்துவர் தரப்பின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
[01/01, 22:04] Mukesh Reporter: அடுக்குமாடி குடியிருப்பில் பல் மருத்துவமனை நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் பல் மருத்துவமனை நடத்துவதை எதிர்க்கும் உரிமையியல் வழக்கை ரத்து செய்யக் கோரி ரோஷன் டொமினிக் ஜூட் ரேயன் மற்றும் லூர்து ஜோவானி ஆகியோர் வழக்கு
மருத்துவமனை நடத்த தடை, எக்ஸ்ரே உபகரணங்கள் அகற்றம், சொத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதாக கூறி நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளுடன் மற்ற வீடுகளின் உரிமையாளர்கள் பால ராஜேஸ்வரி, அலெக்சாண்டர், வின்சென்ட் உள்ளிட்டோர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு என குற்றச்சாட்டு
ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் முழு பிளாட்டும் சட்டவிரோதமாக கிளினிக்காக மாற்றப்பட்டதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய பிரச்சினை – நீதிபதி எஸ். சௌந்தர்
மருத்துவர் மனுவை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்தது சரியே. பல் மருத்துவர் தரப்பின் சீராய்வு மனு தள்ளுபடி – நீதிபதி எஸ். சௌந்தர்