நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வரும் டிச.19 வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப்பணிகளையும் இறுதி செய்யக்கூடாது, என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்களது நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் வர்த்தக பொருட்காட்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் முறையாக டெண்டர் எடுத்து நடத்தி வருகிறோம். இதற்காக எங்களது நிறுவனம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. சென்னை தீவுத்திடலில் கடந்த 2012 முதல் பலமுறை சுற்றுலாத்துறை சார்பில் பொருட்காட்சியை நடத்தியுள்ளோம். ஆனால் 2021-ம் ஆண்டு பொருட்காட்சி நடத்த எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும், கரோனா காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் 2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த அக்.31 அன்று சுற்றுலாத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் எங்களது நிறுவனம் சார்பில் உரிய முன்கேட்புத் தொகை செலுத்தி பங்கேற்றோம். கடந்த நவ.30 அன்று டெண்டர் பெட்டி திறக்கப்பட்டபோது எங்களது நிறுவனம் உள்பட 5 டெண்டர் விண்ணப்பங்கள் அதில் இருந்தது. ஆனால் மறுநாள் டிச.1-ம் தேதியன்று நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறைகளில் எங்களது பிரதிநிதியை மட்டும் வெளியேற்றி விட்டு அதிகாரிகள் டெண்டரை இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. எங்களது நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான டெண்டர் படிவம் மட்டும் திறக்கப்பட்ட நிலையில், டெண்டருக்கான தொகையை நிர்ணயம் செய்யும் நிதி தொடர்பான டெண்டர் படிவம் கடைசி வரை திறக்கப்படவில்லை. இதன்மூலம் அதிகாரிகள் டெண்டர் நிபந்தனைகளை மீறி தங்களது விருப்பம்போல இந்த டெண்டரை வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. இது சட்டவிரோதமானது. எனவே இந்த டெண்டருக்கு தடை விதி்க்க வேண்டும். எங்களது டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வரும் டிச.19 வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப்பணிகளையும் இறுதி செய்யக்கூடாது, என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME