நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம் தண்டபாணி, கே.குமரேஷ் பாபு ஆகிய மூவர் அடங்கிய முழு அமர்வு விசாரித்து உத்தரவு./ கிராம உதவியாளர்களாக பணியாற்றிவர்களின் ஓய்வூதிய

கிராம உதவியாளர்களாக பணியாற்றிவர்களின்
ஓய்வூதியத்தை கணக்கிடும் போது, அவர்கள் பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களாக பகுதி நேர அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களுக்கு 1995 ம் ஆண்டு ஜூன் மாதம் பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2016 ம் ஆண்டு ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் இளங்கோவன் என்பவர், தனது ஓய்வூதியத்தை கணக்கிடும் போது பகுதி நேர உதவியாளராக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

அதன் அடிப்படையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம் தண்டபாணி, கே.குமரேஷ் பாபு ஆகிய மூவர் அடங்கிய முழு அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களின் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் பகுதி நேர அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு இந்த சலுகையை வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com