நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த, 64 வயது முதியவர் சிவா, கடந்த 2018 மார்ச் 4 ம் தேதி அங்கு வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சிவா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version