நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார்.
சட்டப் பணியில் 50 ஆண்டுகள் சேவையாற்றிய ஜார்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகத்துக்கு சென்னை தனியார் விடுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், பணி ஓய்வுபெற்ற பிறகும் இன்னும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகளை கவனிப்பவர் கற்பக விநாயகம் என பாராட்டினார்.
ஏற்புரையாற்றிய நீதிபதி கற்பக விநாயகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 74 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நீதிபதி லலித், குறுகிய காலத்தில் நீதித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என புகழ்ந்தார்.
மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிகராக விரும்பிய தன்னை அரசு வழக்கறிஞராக நியமித்ததன் மூலம் நீதிபதியாகி, தலைமை நீதிபதியாக உயர காரணம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தான் எனக் குறிப்பிட்டார்.
வாழ்நாளில் பிறருக்கு உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர்மோகன், பரதச்சக்கரவர்த்தி, மஞ்சுளா, புகழேந்தி, ஜெயச்சந்திரன், சுரேஷ்குமார், எஸ்.எஸ்.சுந்தர், தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை, வழக்கறிஞர் எச்.மணிவண்ணன் ஆகியோர் ஓய்வுபெற்ற நீதிபதி கற்பகவிநாயகத்தை பாராட்டி பேசினர்.