நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் நாளை திரைக்கு வர்அ உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுனம் மற்றும் நடிகர் ஆர்யா தரப்பு வக்கீல் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி , குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளோம் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இருந்தாலும், பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்ற தெரிவிக்க பட தயாரிப்பு நிறுவனங்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு மற்றும் நடிர் ஆர்யா தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் பாடல் டியூன் மியூட் செய்யப்படும் என தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் நாளை தகவல் தெரிவிக்க விசாரணையை தள்ளிவைத்தனர். படம் திரையிட அனுமதி வழங்கினர்

You may also like...

Call Now ButtonCALL ME