திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர்

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கு தொடருமாறு உத்தரவிட்டுள்ளது .

மரக்காணம் ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அவர் தன் மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தான் 14 ஓட்டுகளும்,தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்…
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகவும் எனவே
வெற்றிபெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார் ..இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என்றும் தற்போதைய மனுவில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்தனர். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனு திரும்பப் பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

You may also like...