தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு வரும் பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சங்க சட்ட விதிகளை மீறி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சங்க சட்ட விதிகளை மீறி செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றதாகவும், விதிமீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு வரும் பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சங்க சட்ட விதிகளை மீறி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சங்க சட்ட விதிகளை மீறி செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றதாகவும், விதிமீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்ட சங்க பதிவாளர் அவர்களுக்கு தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் என்பவர் புகார் அளித்திருந்தார். அப்புகார் மீது விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், அந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி சதீஷ்குமார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் கொடுத்த புகாரை இரண்டு மாதத்திற்குள் சட்டப்படி விசாரித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விதிமீறல்கள் குறித்தும் விசாரித்து பொதுக்குழு மற்றும் தேர்தலை பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்ட சங்க பதிவாளர் தனி அலுவலர் ஒருவரை நியமித்து நடத்துமாறு உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version