தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை கொண்டு நடத்த வேண்டும் என்று பார் கவுன்சில் மூத்த உறுப்பினர் எம் வேல்முருகன் பேட்டி
[25/09, 08:57] Sekarreporter: 2026 ம் ஆண்டு ஜனவரி31 ம் தேதிக்குள் பார்கவுன்சில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக
பார் கவுன்சில் உறுப்பினர் M.வேல்முருகன்
பத்திரிகையாளர்கள் சந்திப்பு
நேரம்: 11.30 மணி
இடம்: எம்.பி.ஏ கேட்
(MadrasHighCourt)
[25/09, 13:31] Sekarreporter: [25/09, 13:26] Sekarreporter: [25/09, 13:26] Sekarreporter:
[25/09, 13:26] Sekarreporter: Velmurugan bar council member interview regarding election varadan member filed case sc
[25/09, 13:31] Sekarreporter: முறைகேடுகள் நடைபெறமால் தடுக்க தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை கொண்டு நடத்த வேண்டும் என்று பார் கவுன்சில் மூத்த உறுப்பினர் எம் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள பார் கவுன்சில் அமைப்பிற்கான தேர்தலை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு பார் கவுன்சில் மூத்த உறுப்பினர் எம் வேல்முருகன்,
வழக்கறிஞர் சங்கங்களுக்கான தேர்தல்கள் பல மாநிலங்களில் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்றதாகவும்,
அப்போது உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் வரும் 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பதிவு செய்யப்படவில்லை வாக்களிப்பு ஒரு பட்டியல் தயாரிக்கப்படவில்லை போன்ற எந்த காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வரதனும் மனு தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்ட வேல்முருகன்,
தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடைபெறவில்லை என தெரிவித்தார்..
சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்து பின்பு தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் தெரிவித்திருந்தை எதிர்த்து மூத்த உறுப்பினர் வரதன் வழக்கை
தாக்கல் செய்ததாகவும்,
ஐந்தாண்டு காலம் தான் பதவிக்காலம் என்ற நிலையில்
சட்ட விரோதமாக நீடிக்க கூடாது என்று குறிப்பிட்ட அவர்,
தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் பிராக்டிஸ் செய்கிறார்கள்,முறையாக தேர்தல் நடைபெற வேண்டும்,
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க
ஓய்ப்பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்,
இதுகுறித்து பார் கவுன்சில் கூட்டத்தில்
முடிவெடுக்க வேண்டும் , எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும், ஏதாவது பிரச்சனை இருந்தால் நீதிமன்றத்தை அணுகுவோம்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
[25/09, 13:36] Sekarreporter:

