தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சங்கர் ஜிவாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா

*தமிழ்நாடு அரசின் திட்டங்களான தமிழ் புதல்வன்,புதுமைபெண் மற்றும் நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் கல்வித் துறையில் தமிழக அரசு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமைச்செயலாளர் என்.முருகானந்தம், இதனால் 48 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 75 சதவீதமாகமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்*

[30/08, 16:53] Sekarreporter:

[30/08, 17:41] Sekarreporter:

தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சங்கர் ஜிவாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றவிழாவில் டிஜிபி ஜி. வெங்கட்ராமன் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் தமிழ்நாடு தொழில் துறை மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என பெருமிதத்துடன் கூறினார். மேலும் கோவிட் பெருந்தொற்றால் பிற மாநிலங்கள் வளர்ச்சியில் முன்னெடுக்க தவறியபோது, முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் 2021ம் ஆண்டு அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டதால் இரட்டை இலக்கு வளர்ச்சியை பெறமுடிந்தது என குறிப்பிட்டார்… இது ஒட்டு மொத்த நமது நாட்டு வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியாகும் என்றும்,

தமிழ்நாடு அரசின் திட்டங்களான “தமிழ் புதல்வன்”, “புதுமைபெண்”மற்றும் “நான் முதல்வன்” போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்து கல்வித் துறையில் இம்மாநிலம் பெரும் வளர்ச்சியை
கண்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமைச்செயலாளர், இதனால் 48 சதவீதமாக இருந்த Gross Enrollment Ratio 75 சதவீதமாக மாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதே போன்று தூத்துக்குடி போன்ற பின்தங்கிய தென் மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அங்கும் அபரீத தொழில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் மற்ற மாநிலங்களை போல் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. எனவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்ததால் அனைத்து துறைகளிலும் குறிப்பாக தொழில் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்..

அதே போன்று அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞரும் இக்கட்டான சூழல்களில் சமயோசிதமாக கையாள்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பேசும்போது அரசு குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்துடன் காவல் துறை ஒன்றிணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். காவல்துறைக்கு என்றென்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகம் உதவியாக இருந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன்முகமது ஜின்னா காவல் துறையில் புலன் விசாரணை ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது. எனவே, புலன் விசாரணைகென்று காவல் துறையில் ஒரு தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்று கூறியதையடுத்து காவல் துறை தலைமை இயக்குநர் அத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றியதை
நினைவுகூர்ந்தார்.

எதிர்காலத்தில் இத்திட்டம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இதை போன்று மிகவும் தேவையான வழக்குகளில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். என்பதை சுட்டிக்காட்டியதை அடுத்து குண்டர் சட்டம் போடுவதை வெகுவாக குறைக்க ஆவண செய்ததோடு இது குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியதையும் குறிப்பிட்டார்.

மேலும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த ஆண்டறிக்கையில் சங்கர் ஜிவால் ,ஒரு நபருக்கு உதவி செய்வதால் மட்டுமே இந்த உலகத்தையே மாற்ற முடியாது.
ஆனால் அந்த நபரால் வேறு உலகத்தை பார்க்க முடியும் என்று குறிப்பிட்டது,
இவரது தலைமை பண்பின் உயர்ந்த குணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com