தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத் நிகழ்ச்சியில், 90 ஆயிரத்து 892 வழக்குகளில், 718 கோடியே74 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத் நிகழ்ச்சியில், 90 ஆயிரத்து 892 வழக்குகளில், 718 கோடியே74 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலு நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மூன்று அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.

மாவட்ட மற்றும் தாலுகா சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக 501 அமர்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.

நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள 84 ஆயிரத்து 106 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 6 ஆயிரத்து 786 வழக்குகள் என மொத்தம் 90 ஆயிரத்து 892 வழக்குகளில், 718 கோடியே74 லட்சத்து 11 ஆயிரத்து 339 ரூபாய் இழப்பீடுகள் வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com