நீதிபதி தண்டபாணி அவர்கள். பொது நலனை கருத்தில் கொண்டு. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 117 மருத்துவர்களின் பணியை வரன்முறை செய்து. பின்னாளில் தகுதி தேர்வு எழுதிய அரசு மருத்துவர்களுக்கு பணிவரன் முறை பெற தகுதியுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு பரிசிலித்து, சேர்க்கை வழங்க

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ
படிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்பித்த அருள்வேல் என்ற அரசு மருத்துவர் நிரந்தர பணி நியமனத்திற்கு முன்பாக, தற்காலிக அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய காலத்தையும், தகுதியுள்ள பணி காலமாக கருதி கலந்தாய்விற்கு அனுமதிக்ககோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மனுதாரர் தரப்பில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சிறப்பு நிபுணத்துவ படிப்பிற்கு 50 சதவிகிதம் இடம். பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளளது எனவும், அந்த உயர் படிப்பு சேர்க்கைக்காக இரண்டு வருட காலம் பணி நிறைவு செய்திருக்கு வேண்டும் எனவும். மனுதாரர் 2021ம் ஆண்டு முதல் தற்காலிகமாக, நிரந்தர பணி இடத்தில் கட்டாய ஒப்பந்தம் அடிப்படையில் (Bond Service) நியமனம் செய்யப்பட்டு, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். தேர்வாணயம் மூலம் நடத்தபட்ட தேர்வின் மூலம் பணி நிரந்தரம் செய்யபட்டுள்ளார் எனவும், இந்நிலையில் தனது தற்காலிகமாக பணியாற்றிய காலத்தினையும் தகுதியுள்ள பணிகாலமாக கருதி உயர் மருத்துவ சேர்க்கைக்கு அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு எம். தண்டபாணி அவர்கள். பொது நலனை கருத்தில் கொண்டு. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 117 மருத்துவர்களின் பணியை வரன்முறை செய்து. பின்னாளில் தகுதி தேர்வு எழுதிய அரசு மருத்துவர்களுக்கு பணிவரன் முறை பெற தகுதியுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு பரிசிலித்து, சேர்க்கை வழங்க வேண்டுமெனவும் உத்திரவிட்டுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவிகித இடத்தில் சேர்க்கை பெற்று. அதனால் பெறப்பட்ட தகுதியுடன் அரசு மருத்துவமனைகளில் உயர் நிபுணத்துவ துறைகளில் தொடர்ந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

மேலும் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான 50 சதவிகித இட ஒதுக்கிட்டில். சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு தகுதியுள்ள மருத்துவர் இல்லையெனில், தமிழக அரசு மருத்துவர்களுக்கு உரிய 72 சிறப்பு நிபுணத்துவ கல்வி இடங்கள். மத்திய அரசுக்கு, வேறு மாநில மருத்துவர்களைக் கொண்டு நிரப்புவதற்காக. ஒப்பளிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி தமிழக அரசு மருத்துவர்கள் தகுதியான பணி காலத்தின் அடிப்படையில் அதிகளவில் சிறப்பு நிபுணத்துவ படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால். 72 சேர்க்கை இடங்கள் மத்திய அரசுக்கு ஒப்பளிப்பு செய்ய வேண்டிய நிலை எழாது எனவும் தெரிகிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version