டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்தச் சோதனையின்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதேபோல், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மனைவி, மகனிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

Recommended For You
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
“டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு”

இதனையடுத்து, விசாகனை அமலாக்கத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை விசாகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத் துறை.

அங்கு ஐந்து மணி நேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையினர், விசாகனை அவர்களது காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், தொடர்ந்து அங்கு வைத்து விசாரிக்கப்படுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அவரது வீட்டில் தொடர்ந்து 15 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விகாகன் ஐஏஎஸ்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like...

Call Now ButtonCALL ME