ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என தெரிவித்துள்ளது..

ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என தெரிவித்துள்ளது..

ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்பதால் இது குறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கும், இஸ்ரோ-வுக்கும் உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜோதிட மூட நம்பிக்கை பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து, அவர்களை குற்றவாளிகளாகவும், போதை அடிமைகளாவும் மாற்றுவதால் ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாரட்டதக்கதாக இருந்தாலும்,  தனிநபரின் நம்பிக்கை  சம்பந்தப்பட்டுள்ளதால்,
மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது.

இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளை களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version