சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலை தள்ளிவைத்ததை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வான அதிமுக வார்டு உறுப்பினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் காடையாம்பட்டி பேரூராட்சி மறைமுக தேர்தலில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற மூன்று பேரூராட்சிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரூராட்சிகளுக்கும் மார்ச் 26ல் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, அதன் அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், காடையாம்பட்டி பேரூராட்சியில் மறைமுக தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டும், தேவையான பாதுகாப்பை மாவட்ட எஸ்.பி. வழங்கவும் உத்தரவிட்டு, காடையாம்பட்டி வழக்கை மட்டும் முடித்துவைத்தனர்.

மற்ற மூன்று பேரூராட்சிகளில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட காரணம் என்ன என விளக்கம் அளிக்கவும், மார்ச் 4ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்குகளின் விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...