சேலம் கோயில்களுக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கல் மண்டபங்களை பராமரிக்க கோரி தொல்லியல் ஆர்வலர் முனைவர் மா ஆனந்தி தாக்கல் செய்த வழக்கு
சேலம் கோயில்களுக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கல் மண்டபங்களை பராமரிக்க கோரி தொல்லியல் ஆர்வலர் முனைவர் மா ஆனந்தி தாக்கல் செய்த வழக்கு
சென்னை 17
சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி மற்றும் குகை அம்பலவாண சுவாமி திருக்கோயில்களுக்கு சொந்தமான சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் மண்டபங்கள் அம்மாபேட்டை பகுதியிலும் நான்கு ரோடு பகுதியிலும் உள்ளன இவைகள் சேலத்தின் தொல்லியல் மற்றும் அடையாள சின்னங்கள் ஆகும். இந்த கல் மண்டபங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆன பிறகும் கூட எந்தவித பராமரிப்பும் இல்லாததால் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது .
இந்த கல் மண்டபத்தில் இருந்த தொல்லியல் சின்னங்கள் திருடு போனதை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை
இங்கு நவராத்திரி திருவிழாவின் 10 ஆம் நாளில் அம்பு போடும் விழாவானது நின்று போய் பல வருடம் ஆகிவிட்டது
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செயற்பொறியாளர் திருக்கோயில் நிர்வாகிகள் ஆகியோருக்கு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 28.10.2025 அன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்தேன் , பிறகு 18.12.2025 அன்று தமிழக அரசுக்கும் , இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கும் , சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் ஆணையர் உட்பட பலருக்கும் நினைவூட்டினேன் . யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எனவே இந்த கல் மண்டபங்களை பாதுகாத்து புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று சேலத்தை சார்ந்த தொல்லியல் ஆர்வலர் முனைவர் மா ஆனந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதியரசர் டி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .