சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகாக உள்ள 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கின்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகாக உள்ள 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கின்றார்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார் (S.Sathikumar) கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

நிரந்தர நீதிபதிகள் 9 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நாளை பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கின்றார்.

நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் – மனைவி ஆவார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக இவர்கள் 9பேரும் பதவியேற்றனர்.

பின்னர் இவர்களை வரவேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்குவர்.

நீதிபதிகளின் வாழ்க்கை வரலாறு

1. ஜி.சந்திரசேகரன்

1962 மே 31ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர்.
பின்னர் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

=========

2. வி.சிவஞானம்
1963 ஜனவரி 1ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பன்ருட்டி, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

=========

3. ஜி.இளங்கோவன்
1963 ஜூன் 6ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட உள்ள மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

=========

4. எஸ்.ஆனந்தி
1960 ஜூலை 31ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

=========

5.. எஸ்.கண்ணம்மாள்
1960 ஜூலை 20ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்சேங்கோடு உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

=========

6. எஸ்.சதிக்குமார்
1963 ஜூலை 18ல் பிறந்தவர். 1994 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர் . சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி, பவானி, சென்னை, அரூர் உள்ளிட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்

=========

7. கே.முரளி சங்கர்
1968 மே 31ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். பின்னர் கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் உள்ளிட்ட
தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்

=========

8. செல்வி ஆர்.என்.மஞ்சுளா
1964 பிப்ரவரி 16ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நான்குனேரி, கோவில்பட்டி, சென்னை
உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்
=========

9. டி.வி.தமிழ்ச்செல்வி
1968 ஜூன் 19ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள இவர்கள் 9 பேரும் மாவட்ட நீதிபதியாக இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்கள்
நாளை பதவியேற்க உள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடதக்கது.

You may also like...

CALL ME
Exit mobile version