சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்
அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்
கரோனா, மழை, வெள்ளம் போன்ற பல்வேறு தொடர் இடர்களால் நிதி நெருக்கடிகள் நிலவும் போது, மாநிலத்தின் கடன்சுமையை நிதியமைச்சர் குறைத்துள்ளார். வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கெனவே முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும். எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்கு உடனிருந்தவர்கள் வழக்குரைஞர்கள். எங்கு எல்லாம் நீதிமன்றங்கள் வேண்டுமோ, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமோ அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். காப்பீடு திட்டத்தில் வழக்குரைஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமில்லை. வழக்குரைஞர் மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதேபோன்று வழக்குரைஞர்களுக்கான நல நிதியையும் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.