கோயில் நிதியில் இருந்து கடைகளை வர்த்தக ரீதியாக கட்டக்கூடாது என்று ஐகோர்ட் தீர்ப்பு உள்ளது. எனவே வேறு எந்த இடத்திலும் கோயில் நிதியில்இருந்து கடை கட்ட அனுமதிக்க கூடாது

இந்து சமய அறநிலையத்துறை, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு இராஜகோபுரம் முன்பாக உள்ள கோயில் திருவிழாக்கள் தொடங்கும் இடத்தில 150 கடைகள் கட்ட நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி ஆர் ரமேஷ் , ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் , திருவண்ணாமலை கோயில் முன்பு எந்த கட்டுமான பணியும்செய்யக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஸ்குமார், சவுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பாக வக்கீல் அருண் நடராஜன் ஆஜராகி 137 கடைகளை வேறு இடத்தில் கட்ட இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.

இப்போது மனுதாரர் டி.ஆர். ரமேஸ் ஆஜராகி, கோயில் நிதியில் இருந்து கடைகளை வர்த்தக ரீதியாக கட்டக்கூடாது என்று ஐகோர்ட் தீர்ப்பு உள்ளது. எனவே வேறு எந்த இடத்திலும் கோயில் நிதியில்இருந்து கடை கட்ட அனுமதிக்க கூடாது , ஏற்கனவே கோபுரம் முன்பு கடை கட்டப்படும் என்ற அரசாணையை ரத்து செய்யாமல் புதிய கடை கட்ட தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த அறநிலையத்துறை க்கு 3 வாரம் அவகாசம் வழங்கி பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version