கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை

நேற்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை

ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

,சென்னை, நவ30-
தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறி வந்தது.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல் 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் இருக்கவில்லை இதுகுறித்து ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமாரிடம் மனுதாரர் வக்கீல் சிவா இன்று காலையில் முறையிட்டார். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீலையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வக்கீலையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version