குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் மனு – இன்று விசாரணை சென்னை: வரவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் (30.03.2026) தொடர்பாக குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின்
[13/03, 13:14] sekarreporter1: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் மனு – இன்று விசாரணை
சென்னை:
வரவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் (30.03.2026) தொடர்பாக குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு இன்று 13.03.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த மனு தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெறும் உயர் அதிகாரத் தேர்தல் குழு (High Powered Election Committee) முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இக்குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜீவ் சக்தர் தலைமையேற்கிறார்.
இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் 12.03.2026 அன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, வரவிருக்கும் பார் கவுன்சில் தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்ததாவது:
பல தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ள சில வழக்கறிஞர் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா அவர்களுக்கும், தேர்தலை கண்காணிக்கும் உயர் அதிகாரத் தேர்தல் குழுவிற்கும் புகார் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் 11 வழக்கறிஞர் வேட்பாளர்களுக்கு எதிராக பல தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர்களில் சிலர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் தங்களது குற்றவியல் பின்னணியை வெளிப்படுத்தியிருந்த போதிலும், தற்போதைய 2026 தேர்தலில் அந்த விவரங்களை தேர்தல் மனு மற்றும் சத்தியப்பிரமாணத்தில் திட்டமிட்டு மறைத்துள்ளனர் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தகைய குற்றப் பின்னணி மறைவு மற்றும் தவறான தகவல் வழங்குதல், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தேர்தல் விதிகள் – 2023 படி தகுதி நீக்கத்திற்குரியதாகும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலுக்கு பிறகு சுமார் 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய வாக்காளர்களுக்கு வேட்பாளர்களின் குற்றப் பின்னணி மற்றும் நற்பெயரை அறியும் சட்டபூர்வ மற்றும் ஜனநாயக உரிமை உள்ளது. அந்த உரிமையை மறைக்கும் வகையில் குற்றப் பின்னணியை மறைப்பது வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை மீறும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, பல தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள அல்லது தங்களது குற்றப் பின்னணியை திட்டமிட்டு மறைத்துள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உயர் அதிகாரத் தேர்தல் குழுவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பார் கவுன்சில் என்பது சட்டத் துறையை ஒழுங்குபடுத்தும் உயர்ந்த சட்டபூர்வ அமைப்பாகும். எனவே, குற்றப் பின்னணி கொண்டவர்கள் அல்லது உண்மைகளை மறைக்கும் நபர்கள் அந்த அமைப்பில் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத் துறையின் கண்ணியத்தையும் நம்பகத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜீவ் சக்தர் தலைமையிலான உயர் அதிகாரத் தேர்தல் குழு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
[13/03, 13:14] sekarreporter1: