குதிரை பேரம் நடந்துள்ளது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது chief bench item 4 Ramkumar athithiyan advt
[16/06, 09:58] Ramkumar Adityan PIL Cases: Writ No. 23340 of 2026
Item No. 4
List Date 16.06.2026
CJ Bench
மனுதாரர். பா. இராம்குமார் ஆதித்தன்
கடந்த மே 13 ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மே 25ம் தேதி தவெக விற்கு ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் பேரவைத் தலைவரை சந்தித்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா கடிதம் அளித்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்தார். உடனே மூவரும் திரு. ஆதவ் அர்ஜீனாவை தலைமைச் செயலகத்தில் வைத்து நேரில் சந்தித்து தங்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்ட உடன் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் வைத்து உறுப்பினர் அட்டை வழங்கியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு மறுதினம் 26.05.2026 அன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார். அதனை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். உடன் இசக்கி சுப்பையா தவெக தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் என்ற முனுசாமி முன்னிலையில் இணைந்தார். இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக வில் இணைவதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். நால்வரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த உடனே தவெக வில் இணைந்து உள்ளனர். மேலும் தேர்தலுக்காக ரூ. 40 லட்சம் வரை ஒவ்வொருவரும் செலவு செய்து உள்ளார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக லாபமடைய வேண்டும் என்ற நோக்குடன் குதிரை பேரம் நடந்துள்ளது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
[16/06, 09:58] sekarreporter1: 👍👍