காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது வழங்கப்பட்ட சிறைதண்டனைக்கு இடைகால தடை* *சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு*

* காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது வழங்கப்பட்ட சிறைதண்டனைக்கு இடைகால தடை*
*சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு*

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் மீது பதியப்பட்ட புகாரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து 2023 –ல் தனி நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் அதே புகார் சம்மந்தமாக மற்ற குற்றவாளிகளில் ஒருவரான பன்னீர்செல்வம் என்பவர் தன் மீது வழங்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீசை வாபஸ் பெறுவது சம்மந்தமாக வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 2023 –ல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த போதிலும், காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர் எனக் கூறி சம்மந்தபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடவடிக்கையை தொடர்ந்தார். மேலும் குற்றப்பத்திரிகையில் ஒரு இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த காவல் அதிகாரியை குற்றவாளி எனக் குறிப்பிட்டு 3 மாதகால சிறைத்தண்டனை நேற்று வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி வேல்முருகன் உத்திரவிட்டார்.
இதனை எதிர்த்து இன்று சம்மந்தபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில், இது சம்மந்தமாக ஏற்கனவே அதே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.
இந்த வழக்கு முடிவில் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளனர். தனிநீதிபதி நேற்று வழங்கிய சிறைதண்டனைக்கு எதிராக இன்றே இடைகால தடை விதித்த தீர்ப்பை வரவேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற காவல்துறையினரும் மிக்க மகிழ்ச்சி அடந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் பப்ளிக் ப்ராசிட்டர் தாமோதரன் ஆஜரானார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com