கலைமகள் சபா வழக்கு கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதா இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
கலைமகள் சபா தொடர்பான வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் ஆஜராகி, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலைமகள் சபா பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்றார். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 33 மாவட்ட கலெக்டர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை
அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டோம்.
இந்த வழக்கு ஜூலை 18-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போதும் அதே பதிலைத்தான் கலெக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் 24-ந்தேதி பிறப்பித்த உத்தரவை இதுவரை கலெக்டர்கள் அமல்படுத்தாததற்கு அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம். கலெக்டர்கள் இந்த ஐகோர்ட்டின் உத்தரவின் தீவிரத்தன்மையை உணராததால், ஒவ்வொரு கலெக்டர்களையும் கண்காணித்து அவர்களிடம் இருந்து அறிக்கையை பெற்று தாக்கல் செய்ய வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதாவை நியமிக்கிறோம். இதற்காக அவரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். 33 கலெக்டர்களின் அறிக்கையுடன் கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதா இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், கலைமகள் சபாவை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரி எந்த அனுமதியையும் பெறாமல், 99 முதலீட்டாளர்களில் 49 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கியுள்ளார். இவர் எப்படி இந்த தொகையை வழங்கினார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் கலைமகள் சபாவில் வங்கிக் கணக்கில் சுமார் ரூ.118 கோடி உள்ளது. இந்த பணம் கொடுக்கும் நடவடிக்கையை சிறப்பு அதிகாரியான பதிவுத்துறை ஐ.ஜி. நிறுத்தி விட்டதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார். இருந்தாலும், பதிவுத்துறை ஐ.ஜி. மீது உள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.இந த. வழக்கில் முதலீட்டாளர்கள் தரப்பில் வக்கீல்கள் கமல்நாதன் சின னதுரை ஆஜரானார்கள். மூத்த வக கீல் சிங்காரவேலனும் ஆஜரானார்
……….