கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தவர் தலைவர் கலைஞர்!! அவரை நன்றியோடு வணங்குகிறேன். தளபதி அவர் கள் வழியில் நடப்போம். கழகம் காப்போம். தமிழ்நாடு காப்போம். வணக்கம் வெ.இரவி தி.மு.க. சொத்து பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவர்
[02/06, 15:06] sekarreporter1: http://youtube.com/post/Ugkx3IRuVQVseX1flGXgmf70t4di8BZy3S_t?si=CsaMTuASGebvoLtw
[02/06, 15:07] sekarreporter1: முரசொலி
02.06.2026
0
7
2
7
4
ள்
7.
கருணையும் நிதியும்!
தலைவர் கலைஞர் அவர்களின் உயர்ந்த குணங்கள். நிகழ்வுகள், எனக்கு பல நினைவில் உள்ளது. அவற்றில் ஒன்றை மட்டும், அவரது பிறந்த நாள் விழா சமயத்தில் எழுதுகிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த காலம். 1997-ம் ஆண்டில் ஒருநாள் மாலை. உயர்நீதிமன்றத்தில் நான் இருந்த வழக்கறிஞர் அறையின் (சேம்பர்) பொறுப்பு உறுப்பினர். ‘நீங்கள் ரூ.17000/- ஓரிரு நாளில் கொடுங்கள். முன்பு சேம்பர் வாடகை உயர்த்தப்பட்டதால் பாக்கி நிலுவைத் தொகை என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முதல் வர் கலைஞர் அவர்களிடம் முறையிடலாம் என்று எண்ணி, அண்ணா அறிவாலயம் சென்று அண்ணன் சண்முகநாதன் அவர்களிடம் கூறினேன். ஒரு மனுவாக எழுதிக் கொண்டு வாருங்கள் என்றார்.
அடுத்த நாள் ஒரு மனுவை ஒரே பக்கத்தில் தயாரித்து. உயர்நீதிமன்றத்தில் நான் நடந்து என் எதிரே வந்த வழக்க றிஞர்களிடம் பிரச்சினையை சொல்லி கையொப்பம் பெற் றேன். அண்ணன் அ.அ.ஜின்னா (நாடளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர்) அவர்களது பெயரை முதலில் போட்டு மற்றும் வழக்கறிஞர்கள் என்று கூறி. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களை அண்ணா அறிவாலயம். தலைவர் அறையில் பார்த்து வணங்கினேன். அவர் கோர்ட்டில் என்னய்யா விசேஷம் என்று வழக்கம் போல கேட்டார். நான் மெதுவாக சேம்பர் வாடகை உயர்வு பிரச் சினை காரணமாக பார்க்க வந்தேன் என்றேன். பிறகு விவ ரம் கூறி மாத வாடகையை ரூ.1500/- என முந்தைய ஆட் சியில் உயர்த்தியுள்ளார்கள் என்றேன். முன்பு வாடகை எவ்வளவு என்றார். நான் முன்பு மாத வாடகை ரூ.100/-பதினைந்து, மடங்காக அதிகப்படுத்தப்பட்டது என்றேன். வழக்கறிஞர்கள் நன்றாக சம்பாதிக்கிறீர்களே என சிரித்து கொண்டே சொன்னார். நான் அனைவரும் அல்ல தலை வரே என்றேன்.
மனுவை வாங்கினார். படித்தார். சிறிது யோசித்து உடனே அந்த மனுவிலேயே. “ஏற்கனவே இருந்த வாட கையை நான்கு மடங்காக உயர்த்தலாம்” என்று எழுதி கையொப்பமிட்டார். (ரூ.400/-மாத வாடகை). நான் மிக வும் பணிவோடு மீண்டும் நிலுவைத் தொகையை பிரித்து ஒவ்வொருவரிடமும் ரூ.17.000/- கேட்கிறார்கள் என் றேன். மொத்த நிலுவைத்தொகை எவ்வளவு என கேட்டார். ரூ.3.70 கோடி (ரூபாய் மூன்று கோடியே எழுபது லட்சம்) என்றேன். இதை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் அரசுக்கு சிரமம் வருமே என்றார். நான் வழக்கறிஞர்களின் சிரமங் களை கருதி தாங்கள் தான் பரிவோடு உதவி செய்ய வேண் டும் என்று பணிவோடு சொன்னேன். அவர் மீண்டும் மனுவை பார்த்து, அதில் ஓரமாக எழுதி, சண்முகநாதனி
26
லை பாடு ங்கு
டம் கொடு என்று தந்தார். அதில் அவர் “ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதை தவிர்க்கவும்” என்று எழுதியதை படித்து என் கண்கள் குளமாகின. பணிவோடு வணங்கி, வெளியில் வந்து, அண்ணன் சண்முகநாதன் அவர்களிடம் நன்றி கூறி கொடுத்தேன். பிறகு உயர்நீதி மன்ற பதிவாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செய லகம் அரசு ஆணை அனுப்பியது. வழக்கறிஞர்கள் பலன் அடைந்தனர். அன்றைய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வியந்து, முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றிகள் கூறி தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட தானை தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா நேரத்தில் இதை குறிப்பிடுவதில் எண்ணி மகிழ்கிறேன்.
கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தவர் தலைவர் கலைஞர்!!
அவரை நன்றியோடு வணங்குகிறேன். தளபதி அவர் கள் வழியில் நடப்போம். கழகம் காப்போம். தமிழ்நாடு காப்போம்.
வணக்கம் வெ.இரவி தி.மு.க. சொத்து பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவர்
Reply