கடனை வசூலில்லாமல் செட்டில்மெண்ட் தொகையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு வங்கி அதிகாரி மீதும், விருதுநகரை சேர்ந்த நிறுவனம் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடனை வசூலில்லாமல் செட்டில்மெண்ட் தொகையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு வங்கி அதிகாரி மீதும், விருதுநகரை சேர்ந்த நிறுவனம் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ட்ஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற மத்திய அரசின் நிதி நிறுவனத்தில், விருதுநகர் மணப்புரத்தை சேர்ந்த பாண்டியன் எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற நிறுவனம் கடந்த 1992ஆம் ஆண்டு 62 லட்சம் ரூபாயை கடன் பெற்றிருந்தது.

கடனை செலுத்தாததால் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி தொடர்ந்த வழக்கில், வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 85 லட்ச ரூபாயை செலுத்த தமிழக நிறுனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு முறை செட்டில்மெண்ட் அடிப்படையில் 14 லட்ச ரூபாயை மட்டும் செலுத்தும் நிறுவனத்தின் முடிவை 2010ஆம் ஆண்டு ஐஐபிஐ வங்கி ஏற்றது.

வங்கியின் செட்டில்மெண்ட் முடிவை மத்திய நிதி அமைச்சகத்தின் குழு ஏற்காததால், தீர்ப்பாயம் நிர்ணயித்த தொகையை திரும்ப செலுத்துமாறு தனியார் நிறுவனத்திற்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தீர்ப்பாயம் உத்தரவை உறுதி செய்து, நிறுவனத்தின் மனுவை கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனியார் நிறுவனத்தின் இரண்டு சொத்துக்கள் வங்கியிடம் இருக்கும்போதும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடனை வசூலிக்காத வங்கியின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, செட்டில்மெண்ட் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்த வங்கி அதிகாரி யார் என்று கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி மீதும், தனியார் நிறுவனத்தின் மீதும் லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் உள்நோக்கம் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version