ஐகோர்ட் அனுமதி நடிகர் ரவி மோகனுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

[20/08, 15:46] Sekarreporter: நடிகர் ரவி மோகனுக்கு எதிரான வழக்கில், சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால், அவரது சொத்துக்களை முடக்கக் கோரி மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், நடிகர் ரவி மோகனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ரவி மோகன் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரது சொத்துக்களை முடக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
படப்பிடிப்புக்கு அட்வான்ஸ் வாங்கிய பிறகு, ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காமல் இழுத்தடித்ததாக ரவி மோகன் மீது புகார் எழுந்தது. அதன்படி, ரவி மோகனுக்கு 5.90 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்ற தவறியதால், அவரது சொத்துக்களை முடக்கக் கோரி மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அடமானத்திற்கு வருகிறதா ரவி …
இந்த உத்தரவு, நடிகர் ரவி மோகனுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
[20/08, 15:46] Sekarreporter: .

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version