எஸ். பிரபாகரன், வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், பாராட்டு நிகழ்ச்சியில் நெறி முறைகளை மீறி பங்கேற்காமல் இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பி.ஆர். கவாய் அவர்களை பாராட்டி மகாராஷ்டிரா பார் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொள்ளாதது மிகவும் கண்டனத்திற்கு உரியது என குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்ரா மாநில உயர் நிலை அதிகாரிகளின் இத்தகைய நெறிமுறைகள் மீறிய செயல், நீதித்துறையினருக்கு மிகப்பெரிய வருத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை , சட்டம் இயற்றும் மன்றங்கள், நிர்வாகத்துறை ஆகிவை சமம் என்றும் ஒவ்வொரு அமைப்பும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனி வரும் காலங்களில் இது போன்று நெறி முறைகள் மீறப்படுவதை மகாராஷ்டிரா அரசு சரி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் நெறிமுறைகளை மீற காரணமாக இருந்த மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.