எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புரட்சி அதிமுக-வின் முதன்மை செயலாளர் வா. புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான
எடப்பாடி K. பழனிசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், கொரோனா காலத்தில் போயி இருப்பார் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பால்டாயில் குடித்தவர் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசியது தொடர்பாக எடப்பாடி K. பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மதிகாரி மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது