இன்ஸ்பெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையைும், அதில் எடுத்த நடவடிக்கையையும் ரத்து செய்கிறேன்
சென்னை ஐகோர்ட்டில், மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் உள்ள துளசம்பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் பதிகோவில் உள்ளது. இந்த கோவிலில் முப்பூஜை தவம் என்ற பூஜை நடத்துவதில் மணி என்பவர் தரப்புக்கும், மாதேசன் என்பவர் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பூஜை மேற்கொள்ள போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிகாரிகளுக்கு மணி கொடுத்த கோரிக்கை மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், துளசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 15-ந்தேதி நடத்தினார். கோவில் விழாவை அமைதியா நடத்தும் விதமாக 9 நிபந்தனைகளை இன்ஸ்பெக்டர் விதித்தார்.
இந்த நிபந்தனையை மாதேசன் தரப்பினர் மீறி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் மணு வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, இன்ஸ்பெக்டர் ஒரு தலைபட்சமாக பேச்சுவார்த்தை நடத்தி, அதில் கட்டாயப்படுத்தி தன் கையெழுத்தை வாங்கி விட்டதாக மாதேசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த 2 வழக்குகளையும் நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மாதேசன் தரப்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘இன்ஸ்பெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தையும், அதில் எடுத்த முடிவையும் ரத்து செய்யவேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் புதிய அமைதி பேச்சுவார்த்தையை நடத்த உத்தரவிடவேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இன்ஸ்பெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை சட்டப்படி நடத்தப்படவில்லை. போலீசார் சட்ட ஒழுங்கை பராமரிப்பதுதான் வேலை. அவர்கள் நீதிமன்றம் போல் விசாரணை நடத்த முடியாது. சிவில் மற்றும் மத ரீதியான உரிமை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த போலீசாருக்கு மட்டுமல்ல வருவாய்துறை அதிகாரிகளுக்கும் சட்டப்பூர்வமான தகுதி இல்லை.
இதுபோல போலீசார் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் இருதரப்பை அழைத்து ஒரு தரப்பை கட்டாயப்படுத்தி கையெழுத்தை வாங்கி, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பின்பற்றுவது என்று கட்டாயப்படுத்தவது அவ்வப்போது காண முடிகிறது.
சமுதாயத்தில் அமைதிய நிலவ வேண்டும். சட்ட ஒழுங்கை பராமரிக்கவேண்டும் என்பதற்காக, இருதரப்பினரின் முழு சம்மதத்துடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இதுபோன்ற நடவடிக்கையை எந்திரத்தனமாக கோவில் திருவிழா உரிமையில் பயன்படுத்த முடியாது.
இன்ஸ்பெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சட்டப்படி இல்லை. எனவே, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட முடியாது.
கோவில் பெயரைச் சொல்லி மணி நன்கொடை வசூலித்தார் என்று மாதேசன் தரப்பு குற்றம் சாட்டுகிறது. பதிலுக்கு அனுமதி இல்லாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் மாதேசன் கட்டிடம் கட்ட முயற்சித்தார் என்று முத்து தரப்பு குற்றம் சாட்டியது.
மேலும், கோர்ட்டு உத்தரவு எதுவும் இல்லாமல், போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர்.ஒரு தரப்பை மிரட்டி கையெழுத்து வாங்குகின்றனர். இது சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதாகும்.
எனவே, சிவில் பிரச்சினை, மத நடவடிக்கை, கோவில் நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை கோர்ட்டு உத்தரவு இல்லாமல் நடத்தக்கூடாது.
இதை அதிகாரிகள் மீறினால், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்டப்படியான நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
இன்ஸ்பெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையைும், அதில் எடுத்த நடவடிக்கையையும் ரத்து செய்கிறேன்
. மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியிுள்ளார்.
……..