இந்நாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான இன்பதுரைதான்− அவர்!

வரலாறு

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர்
ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 206 – வது பிறந்தநாள் இன்று!

சென்னை மெரினாவில் கால்டுவெல் அவர்களின் திருஉருவச்சிலை ஒன்று உள்ளது.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அனைத்து தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கும் ஆண்டுதோறும் அவர்களது பிறந்தநாள் அன்று தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுவது வழக்கம். −பிஷப் கால்டுவெல் சிலையை தவிர!

ஆம்!. தமிழறிஞர் பிஷப் கால்டுவெல் சிலைக்கு மட்டும் அரசு மரியாதை− மாலை அணிவிப்பு என்று எதுவும் கிடையாது.

நெல்லை மாவட்டம் இடையன்குடிதான் தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த ஊர்.

சென்னையில் வசிக்கும் இடையன்குடி கிராம மக்கள் கால்டுவெல் பிறந்த நாளன்று ஒரு குழுவாக வந்து மெரினாவிலுள்ள கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்துச் செல்வதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டிருந்தனர்.

கால்டுவெல் பிறந்ததினத்தை அரசு விழாவாக அறிவித்து மெரினாவிலுள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவேண்டும் என்ற அம்மக்களின் நெடுநாள் கோரிக்கை அரசாங்கத்தின் காதுகளில் மட்டும் ஏனோ விழவே இல்லை!

2014 ம் ஆண்டு தமிழறிஞர் கால்டுவெல் அவர்களின் பிறந்தநாளை இருநூற்றாண்டு விழாவாக இடையன்குடி மக்கள் கொண்டாடியபோது அன்றைய நெல்லை திருமண்டல பிஷப் தமிழறிஞர் கால்டுவெல் பிறந்த தினத்தை அரசுவிழாவாக கொண்டாட வேண்டுமென்று தமிழக அரசை கோரினார்.

அப்போது தமிழக முதல்வராக இருந்த அம்மா அவர்களின் நேரடி பார்வைக்கு
இந்த கோரிக்கையை ஒருவர் எடுத்துச் சென்றார்.

அன்றைய தினமே அம்மா அவர்கள் கால்டுவெல் பிறந்ததினம் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் சென்னை மெரினா மற்றும் இடையன்குடியிலும் உள்ள கால்டுவெல் திருஉருவச் சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்றும் தமிழக அரசின் சார்பில் ஒரு ஆணையை வெளியிட்டார்.

அந்த 2014ம் ஆண்டிலிருந்துதான் கால்டுவெல் பிறந்தநாள் தோறும் மெரினா கடற்கரையிலும் இடையன்குடியிலும் உள்ள கால்டுவெல் சிலைகளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

2014ம் ஆண்டு முதல்முதலாக நடந்த அரசு விழாவில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த வளர்மதி, வீரமணி, சின்னையா,கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் மெரினாவிலுள்ள கால்டுவெல் சிலையின் பீடத்தின் கீழ் வைக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு பூத்தூவி மரியாதை செலுத்தினர். இறுதியாக வெள்ளை பான்ட்−ஷர்ட் அணிந்த ஒரு நபரை தமிழக அரசு அதிகாரிகள் ஸ்பெஷலாக அழைத்து கால்டுவெல் சிலைக்கு மரியாதை செய்ய வைத்தனர்.அவர்தான் கால்டுவெல் சிலைக்கு ஆண்டுதோறும் அரசுமரியாதை செய்யவேண்டுமென்ற கோரிக்கையை மறைந்த முதல்வர் அம்மாவின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் சென்றவர்.

அவர் வேறு யாருமல்ல!

அ.தி.மு.க மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளரும்−

இந்நாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான இன்பதுரைதான்− அவர்!


You may also like...