இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றங்களில் இ பைலிங் நடைமுறை, அமல்படுத்துவதை டிசம்பர் 1 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றங்களில் இ பைலிங் நடைமுறை, அமல்படுத்துவதை டிசம்பர் 1 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காகிதம் இல்லாத நிலையை உருவாக்கி இ- பைலிங் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தினால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் இ பைலிங் முறையை நடைமுறைக்கு கொண்டு வர கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா அவர்களை இந்திய பார்கவுன்சிலின் துணை தலைவர் எஸ் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து இ பைலிங் முறையை உடனடியாக அமல்படுத்தினால் வழக்கறிஞர்கள் சிரமப்படுவார்கள் என்றும் காகிதங்களை பதிவேற்றம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், இ – பைலிங் நடைமுறையை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு,மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் இ பைலிங் நடைமுறை டிசம்பர் மாதம் 1 ம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com